சினிமா

Amaran Collection : சிவகார்த்திகேயன் கெரியரில் புதிய உச்சம்… 30 நாட்களில் அமரன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Published

on

Amaran Collection : சிவகார்த்திகேயன் கெரியரில் புதிய உச்சம்… 30 நாட்களில் அமரன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி

Advertisement

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் 30 நாட்கள் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அவரது சினிமா கெரியரில் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதனை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘அமரன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி கடந்த 31-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்த படத்தை பார்த்த ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ‘அமரன்’ படத்தை பாராட்டியுள்ளார்கள். இதேபோன்று சினிமா துறையில் பலரும் அவரிடம் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே படத்துடைய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் சிலரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது ‘அமரன்’ படத்தை மத்திய அமைச்சர் வெகுவாக பாராட்டினார். இந்த நிலையில் 30 நாட்களில் ‘அமரன்’ திரைப்படம் பெற்றுள்ள வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

படம் வெளியான அக்டோபர் 31-ஆம் தேதியிலிருந்து நேற்று வரைக்கும் இந்த திரைப்படம் சுமார் 325 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வெளிவந்த தமிழ் படங்களில் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் வசூல் ரீதியாக முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் இருப்பது கவனிக்கத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version