இந்தியா

Cyclone Fengal: ரயில் பயணிகள் கவனத்திற்கு… “5 ரயில்கள் ரத்து” தெற்கு ரயில்வே அதிரடி…

Published

on

Cyclone Fengal: ரயில் பயணிகள் கவனத்திற்கு… “5 ரயில்கள் ரத்து” தெற்கு ரயில்வே அதிரடி…

5 ரயில்கள் ரத்து” தெற்கு ரயில்வே

Advertisement

 

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சென்னை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டிதீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பொது போக்குவரத்தும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று (நவம்.30) முன்தினம் புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது. இந்நிலையில், மழையின் தாக்கம் காரணமாக, விழுப்புரம், விக்கிரவாண்டி ரயில்வே வழித்தடங்களிலுள்ள தாண்டவாளங்களில் மழைநீர், சூழ்ந்துள்ளதால் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையொட்டி பயணிகளின் பாதுகாப்பை கருதி இன்று (டிசம்பர்.2) தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஐந்து முக்கிய ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

வைகை எக்ஸ்பிரஸ் ரயில்,  காரைக்குடி – சென்னை, எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்  மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்,  சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில், சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  அதேபோல், சென்னை- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்- தாம்பரம் ரயில், புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதேபோன்று நேற்று (டிசம்பர்.1) சென்னையை நோக்கி வந்துக்கொண்டிருந்த நெல்லை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தசாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version