சினிமா

QUEEN OF THE SOUTH சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் பரிசு..! வெளியாகிய வரலாற்று காணொளி..இதோ

Published

on

QUEEN OF THE SOUTH சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் பரிசு..! வெளியாகிய வரலாற்று காணொளி..இதோ

இன்று நடிகை சில்க் ஸ்மிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்ட “சில்க் ஸ்மிதா – க்வீன் ஆஃப் த சவுத்” திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. 80களிலும் 90களின் தொடக்க காலத்திலும் தென்னிந்திய திரையுலகை கலக்கிய சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தில் சந்திரிகா ரவி நடித்துள்ளார்.இணையத்தில் இப்படத்தின் 3 நிமிட விளம்பரத்தை பகிர்ந்த சந்திரிகா ரவி, “இன்று சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘சில்க் ஸ்மிதா – க்வீன் ஆஃப் த சவுத்’ முதல் பார்வையை உங்களுடன் பகிர்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பார்வை, 1984ஆம் ஆண்டு வெளியான ‘வாழ்கை’ திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த மெல்ல மெல்ல பாடலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.வீடியோவை இந்தியாவின் முதல் மகளிர் பிரதமர் இந்திரா காந்தி செய்திகளில் சில்க் ஸ்மிதாவை குறித்து பார்த்து, “அவங்க யாரு?” என்று கேட்பதுடன் தொடங்குகிறது. அவருடைய உதவியாளர், “அவர் உங்களைப்போல இரும்பு பெண்மணி, இந்த மேக்னடிக் லேடி” என பதிலளிக்கிறார்.சில்க் தனது அழகாலும் ஸ்டைலாலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் காட்சிகளுடன், ஒரு ரசிகரின் கல்லில் தனது கையெழுத்தை இடும் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தெருவில் காணும் நாய்களுடன் சந்தோஷமாக விளையாடும் சந்திரிகா சில்க் ஆக மாறுகின்றார். ஆனால் தனிமையில் இருக்கும்போது, செக்ஸ் சின்னமாக முத்திரை குத்தப்பட்ட அவரது வெற்றியூட்டிய வாழ்க்கை மற்றும் விஜயலட்சுமி என்ற அவரது இயற்பெயரை நினைத்து தவிக்கிறார்.இந்த வீடியோவில் சில குறிப்புகளை ரசிகர்கள் ஆர்வமுடன் பகுத்து விளக்கினர். ஒரு ரசிகர், “நாய் மூச்சுவிடும் காட்சியை தொடர்ந்து சில்கை பார்த்து ஆண்கள் உற்றுநோக்கும் காட்சி செம ரெஃபரன்ஸ்!” எனக் குறிப்பிட்டார். மற்றொருவர், “ஆடவர் டென்னிஸ் விளையாடும்போது பந்து தவறுவதும், shirt கழட்டிக் autography வாங்கும் காட்சியும் creative-ஆக இருக்கு” என எழுதினார்.சில்க் ஸ்மிதா என்ற விஜயலட்சுமி வடலபதி, தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் சிறந்த நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் புகழ்பெற்றவர். மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். 1980 மற்றும் 1990களின் மிக முக்கிய நடிகையாக, 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.இந்த புது திரைப்படத்தின் முதல் பார்வை, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.காணொளி இதோ.. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version