இந்தியா

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு : மக்களவையில் திமுக நோட்டீஸ்!

Published

on

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு : மக்களவையில் திமுக நோட்டீஸ்!

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் இன்று (டிசம்பர் 3) திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி இரவு கரையை கடந்தது.

Advertisement

இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது.

இதனாலும் சாத்தூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளன.

விவசாய நிலங்களில் பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அங்கு நடைபெற்று வரும் மீட்டுப் பணிகளையும் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு நேற்று மாலை கடிதம் ஒன்று எழுதினார்.

அதில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 2000 ரூபாய் அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக விவாதிக்க கோரி மக்களவையில் திமுக எம்பி கனிமொழி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

Advertisement

அதில் இடைக்கால நிவாரணமாக 2000 கோடி ரூபாய் வழங்குவது குறித்தும் மத்திய குழுவை அனுப்புவது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

நேற்று திமுக எம்பி டி ஆர் பாலு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள செய்த மதிப்பீட்டை கணக்கிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதே கோரிக்கையை மதிமுக எம்பி துறை வைக்கவும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மத்திய அமைச்சர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு: என்ன காரணம்?

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version