சினிமா

அடுத்த ஆயிரம் கோடிக்கு அடித்தளம் போட்ட அட்லீ.. சல்மான் கானின் பட பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.?

Published

on

Loading

அடுத்த ஆயிரம் கோடிக்கு அடித்தளம் போட்ட அட்லீ.. சல்மான் கானின் பட பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.?

அட்லீயின் படங்கள் என்னதான் விமர்சனத்தை சந்தித்தாலும் வசூலில் குறை சொல்ல முடியாத அளவுக்கு பெரிய லாபத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில் அவர் இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூலை அள்ளிக் குவித்தது.

அடுத்ததாக பாலிவுட்டில் வைத்து படம் எடுக்கிறார். இந்த படம் கிட்டதட்ட ஒன்பது மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்நிலையில் ஜவான் படம் எடுக்கும்போது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக குடும்பத்துடன்மும்பையில் தங்கி இருந்தார்.

Advertisement

மேலும் படத்தின் பட்ஜெட்டும் பெரிய அளவில் எகிறியது. குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பது போல அட்லீயின் ஆசானான ஷங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தனது படங்களை எடுத்து வருவது வழக்கம். அதேபோல் அட்லீயின் படங்களும் பெரிய பட்ஜெட் படங்களாக அமைகிறது.

அந்த வகையில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் படத்திற்கு படப்பிடிப்பு செலவு மட்டும் கிட்டதட்ட 250 கோடியாம். இதில் சம்பளம் செலவு இல்லாமல் படப்பிடிப்புக்கு மட்டுமே இந்த தொகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் சம்பளத்தை எல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டை தாண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஒன்பது மொழிகளில் இந்த படம் வெளியாவதால் இந்த தொகை சர்வசாதாரணம் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. ஏனென்றால் அட்லீ எவ்வளவு பட்ஜெட் செலவிட்டாலும் அதிலிருந்த பல மடங்கு லாபத்தை எடுத்து விடுவார். ஆகையால் இந்த படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

Advertisement

மேலும் அட்லீ இயக்கத்தில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் இப்போது கொடி கட்டி பறந்து வருகிறார். அதாவது வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version