இலங்கை
அநுராதபுரத்தில் சட்டவிரோதமான மர்மபொருளுடன் கைதான சந்தேக நபர்!
அநுராதபுரத்தில் சட்டவிரோதமான மர்மபொருளுடன் கைதான சந்தேக நபர்!
அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபும் மஹாவிலாச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 08 கிராம் 510 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.