இந்தியா

ஏற்காடு வர வேண்டாம்… சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுப்பு

Published

on

ஏற்காடு வர வேண்டாம்… சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுப்பு

ஏற்காட்டில் காற்றாற்று வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

Advertisement

ஃபெஞ்சல் புயலால் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன்படி சேலம் மாவட்டத்தில் மட்டும் 1235.8மிமீ மழைப்பதிவாகியுள்ளது.

ஏற்காட்டில் மட்டும் முதல் நாள் 144.4 மில்லி மீட்டர், இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை 238 மில்லி மீட்டர் என அடுத்தடுத்த இரு நாட்களில் மிக கனமழை பெய்தது. இதனால், ஏற்காடு மலை கிராமங்களிலும், மலை பாதைகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவு மற்றும் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை பெய்து வருவதால் கடும் குளிரும், பனியும் நிலவி வருகிறது. எனவே ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் பயணத்தை தவிர்க்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version