இந்தியா

கிச்சன் கீர்த்தனா: வரகு அரிசி அடை!

Published

on

கிச்சன் கீர்த்தனா: வரகு அரிசி அடை!

மழைவிட்டாலும் சில்லென்ற சூழ்நிலையில் உடலுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் அவசியம். அதற்கு அரிசி, கோதுமையைக் காட்டிலும்  நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த வரகு அரிசி அடை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இந்த அடை, அனைவருக்கும் ஏற்றது.

வரகு அரிசி – ஒரு கப்
துவரம்பருப்பு – கால் கப்
கடலைப்பருப்பு – கால் கப்
மைசூர் பருப்பு – கால் கப்
வெங்காயம் – ஒன்று
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – 10
கொத்தமல்லி – சிறிதளவு
தண்ணீர், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

Advertisement

வரகு அரிசியைக் கழுவி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அனைத்துப் பருப்புகளையும் கழுவி தனி பாத்திரத்தில் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு, அரிசியை வடிகட்டி மிக்ஸியில் சேர்க்கவும். அதில் பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மென்மையாக அரைத்தெடுக்கவும். இப்போது பருப்புகளை வடிகட்டி அதே மிக்ஸியில் சேர்க்கவும். கொர கொரப்பாக அரைத்து, அரிசிக் கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

இதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலக்கவும். ஒரு தோசை கடாயைச் சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, சிறிதளவு மாவைப் பரப்பி, நடுத்தர தீயில் அடையாகச் சுட்டெடுக்கவும். சுவையான, ஆரோக்கியமான வரகு அரிசி அடை தயார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version