இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் சுமார் 7ஆயிரத்துக்கும் அதிகமான வசாய நிலங்கள் பாதிப்பு!

Published

on

சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் சுமார் 7ஆயிரத்துக்கும் அதிகமான வசாய நிலங்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக 7,603 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் பயர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பை கடவை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 1100 ஹெக்டேயர் விவசாய நிலங்களும்  மாந்தையில் 1168 விவசாய நிலங்களும், நானாட்டானில் 768 ஹெக்டேயர் விவசாய நிலங்களுமாக மொத்தம் 7603 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்புகளில் செய்கையிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன.  

Advertisement

இம்முறை மன்னார் மாவட்டத்தில் காலபோக செய்கைக்கென 11,776 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 4173 ஹெக்டேயர் விவசாய நிலப் பயிர்கள் மாத்திரம் தற்போது பகுதியளவில் காப்பாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் இம்முறை விவசாய செய்கைக்காக பல விவசாயிகள் அரச மற்றும் தனியார் வங்கிகளிலும், கிராம மட்ட அமைப்புகளிடமும் கடன்களை பெற்றுள்ள நிலையில், அவற்றை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் தள்ளுபடி செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version