இந்தியா

டாப் 10 செய்திகள்: பள்ளிகளுக்கு விடுமுறை முதல் அதிமுக போராட்டம் வரை!

Published

on

டாப் 10 செய்திகள்: பள்ளிகளுக்கு விடுமுறை முதல் அதிமுக போராட்டம் வரை!

கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 3) பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு வட்டங்களுக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisement

திருவண்ணாமலையில் மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று  இரவுக்குள் நிவாரணத் தொகையை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று சண்டிகர் செல்கிறார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் செல்கிறார்.

சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று திருப்பூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கழக குழுத் தலைவர்அன்பகம் திருப்பதி தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெற உள்ளது. 

Advertisement

தொடர்ந்து 6வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிய நிலையில். இன்று முதல் அவையை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் சமரசம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். 

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் டிங் லிரென் – குகேஷ் இடையேயான 7-வது சுற்று போட்டி சிங்கப்பூரில் இன்று நடைபெறுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version