சினிமா
தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்.. மகிழ்ச்சியில் ப்ளூ சட்டை மாறன்
தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்.. மகிழ்ச்சியில் ப்ளூ சட்டை மாறன்
சமீபத்தில் சூர்யாவின் படம் வெளியான நிலையில் முதல் நாளிலிருந்து மோசமான விமர்சனத்தை பெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் நெகட்டிவ் விமர்சனத்தால் போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியாமல் திணறியது.
வேண்டுமென்றே இந்த படத்திற்கு பலர் நெகட்டிவ் விமர்சனத்தை பரப்புவதாக கூறப்பட்டது. மேலும் தயாரிப்பாளர் சங்கம் தியேட்டரில் யூடியூபர் பேட்டி எடுப்பதை அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடர்ந்தனர். அதோடு படம் வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகுதான் விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை வைத்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் இந்த வழக்கை விசாரித்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சி தரும்படி உத்தரவிட்டுள்ளனர். அதாவது ஒரு படத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்பது அவர்களின் கருத்துரிமையை பறிப்பது போன்றது.
இதனால் பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்ல முடியாது. அதோடு விமர்சனத்தால் பல படங்கள் வெற்றியையும் தழுவியிருப்பதாக கூறி இருக்கின்றனர். மேலும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் ஆகியோரை பற்றி தவறாக கருத்து வைத்தால் கண்டிப்பாக காவல்துறையில் புகார் கொடுக்கலாம்.
மற்றபடி படத்தை விமர்சனம் செய்வதால் யூடியூபர் மற்றும் சினிமா விமர்சகர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு ப்ளூ சட்டை மாறன் சிறப்பான தீர்ப்பு, கருத்து சுதந்திரம் வென்றது என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
ஏனென்றால் பெரும்பான்மையான ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்த்துவிட்டு தான் படம் பார்க்க சென்று வருவார்கள். அதுவும் ப்ளூ சட்டை மாறன் வாயால் அத்தி பூத்தார் போல் ஒரு சில படங்களுக்கு தான் நல்ல விமர்சனத்தை கொடுப்பார். இப்போது அவருக்கு சாதகமாக இந்த தீர்ப்பு வந்துள்ளது.