இலங்கை

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

Published

on

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

Advertisement

அதன்படி நாளை முதல் மீண்டும் பரீட்சை ஆரம்பிக்கப்படும் எனவும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் படி பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை நடைபெறாத நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version