தொழில்நுட்பம்

நத்திங் ஃபோன் 3 ஸ்மார்ட்போன் : மாடல் எண்ணுடன் கசிவான விவரக்குறிப்புகள்!

Published

on

நத்திங் ஃபோன் 3 ஸ்மார்ட்போன் : மாடல் எண்ணுடன் கசிவான விவரக்குறிப்புகள்!

Advertisement

முன்னதாக, இந்த ஃபோன் ஆனது IMEI டேட்டாபேஸில் பல விவரங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது இந்தியாவில் வெளியீடு செய்யப்படவுள்ளதை உறுதி செய்வதாக உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிற்குள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. மேலும், ப்ராசசர், ரேம் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்ற பல விவரங்கள் காணப்பட்டன.

  மாடல் எண் A059 உடன் வரவிருக்கும் நத்திங் ஃபோன் 3 கீக்பெஞ்சில் காணப்பட்டது. இது குவால் காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்தச் டிவைஸ் ஆனது சிங்கிள்-கோர் டெஸ்டில் 1149 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது, அதே சமயம் மல்டி-கோர் டெஸ்டில் 1813 புள்ளிகளைப் பெற்றுள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் அட்ரீனோ 810 GPU பொருத்தப்பட்டிருக்கும் மற்றும் 8 GB ரேம் ஆதரவையும் கொண்டிருக்கும் என்று பட்டியல் கூறுகிறது. இது இன்னும் சில மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். நத்திங் ஃபோன் 3 ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான NothingOS மூலம் இயங்குகிறது.

நத்திங்கின் வரவிருக்கும் சீரிஸில் இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்படலாம். A059 மற்றும் A059P ஆகிய மாடல் எண்கள் கொண்ட இரண்டு போன்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் IMEI டேட்டாபேஸில் காணப்பட்டன. A059 மாடல் ஆனது ஸ்டாண்டர்ட் நத்திங் ஃபோன் 3 என்று பொருள் கொள்ளலாம் மற்றும் A059P மாடலில் உள்ள “P” என்பது பிளஸ் மாடல் என்று பொருள் கொள்ளலாம்.

Advertisement

வெளியான தகவல்களின் படி, நத்திங் ஃபோன் 3 ஆனது 6.5 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் மற்றும் ஆர்கனைன் என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. முந்தைய அறிக்கைகளின் படி, இந்த ஸ்மார்ட்போன்களானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 அல்லது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் நத்திங் ஃபோன் 2 ஸ்மார்ட்போன்களானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

வெளியான தகவல்களின் படி, பிளஸ் மாடல் ஆனது 6.7 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் மற்றும் ஹிசுயன் என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் மீடியாடேக் டைமென்ஷன் 9400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதை நத்திங் ஃபோன் 3 ப்ரோ என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்பப்டுகிறது. நத்திங் ஃபோன் 3 இன் பேஸ் வேரியண்ட்டின் விலை $599 (தோராயமாக ரூ.50,000) இருக்கலாம் என்றும், ப்ரோ வேரியண்ட்டின் விலை $699 (தோராயமாக ரூ.59,000) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version