இந்தியா

மழை காரணமாக ரயில்வே போக்குவரத்தில் மாற்றம்.. மதுரை தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

Published

on

மழை காரணமாக ரயில்வே போக்குவரத்தில் மாற்றம்.. மதுரை தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

போக்குவரத்தில் மாற்றம்

Advertisement

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெஞ்ஜல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் ரயில்வே நிர்வாகம் சார்பில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் மதுரை கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக பராமரிப்பு பணிகள் நடந்து வரக்கூடிய நிலையில் கீழ்காணும் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வருகின்ற டிசம்பர் 3, 5, 7, 19, 20, 21, 23, 26, 27, 30, ஜன., 3,6,8ல் செங்கோட்டை யில் இருந்து காலை 7:05 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் (16848) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மானாமதுரை, காரைக்குடியில் நின்று செல்லும்.

டிச., 19, 26ல் நாகர்கோவிலில் இருந்து காலை 6:15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் மும்பை-சி.எஸ்.டி., ரயில் (16352), டிச., 21ல் கன்னியாகுமரியில் இருந்து காலை 5:50 மணிக்கு புறப்படும் குமரி-ஹவுரா ரயில் (12666), டிச. 20, 25, ஜன., 2, 5ல் குருவாயூரில் இருந்து இரவு 11:45 மணிக்கு புறப்படும் குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயில் (16128) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இம்மூன்று ரயில்களும் மானாமதுரையில் நின்று செல்லும். டிச., 26ல் மதுரை- பிகனெர் ரயில் (22631) மதுரையில் இருந்து காலை 11:55 மணிக்கு பதிலாக மதியம் 2:00 மணிக்கு புறப்படும் என்று மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version