சினிமா

ரஜினியின் பிறந்தநாளில் ‘ஜெயிலர் 2’ அறிவிப்பு.

Published

on

ரஜினியின் பிறந்தநாளில் ‘ஜெயிலர் 2’ அறிவிப்பு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.

சில மாதங்களுக்கு முன்னர் ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி.

Advertisement

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினி உட்பட பல மொழிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

உபேந்திரா, நாகர்ஜுனா, சௌபின் ஸாஹிர் என பலரும்  சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

ஆயிரம் கோடி வசூலை எதிர்பார்த்து தயாரிக்கப்படும் இப்படம் அதன் இலக்கை கண்டிப்பாக அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினி அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ காணொளிக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

எதிர்வரும் 12ஆம் திகதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு  கூலி படத்திற்கான போஸ்டர்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜெயிலர் 2 அறிவிப்பும் அது தொடர்பான காணொளிகளும் இரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

ஒருவேளை ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கப்போகும் படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாகவே ரஜினி அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என சொல்லப்படும் நிலையில், ஒருவேளை அதன் அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகலாம் என இரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version