இலங்கை

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை; பொலிஸார் தலையீடு

Published

on

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை; பொலிஸார் தலையீடு

  அரச,தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை அமைதியின்மை ஏற்பட்டது.

வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கி புறப்படத் தயாராக இருந்த அரச மற்றும் தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது.

Advertisement

அரச பேருந்து புறப்படுகின்ற நேரம் தொடர்பிலேயே குறித்த வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் பேருந்து நிலையப்பகுதியில் இரு தரப்பிற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தியிருந்தனர்.

இதற்கிடையில் பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச் சபையின் நேர கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறி அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version