சினிமா

“வீட்டுக்கு செல்லும் நேரமிது” – 37 வயதில் ஓய்வை அறிவித்த பிரபல நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Published

on

“வீட்டுக்கு செல்லும் நேரமிது” – 37 வயதில் ஓய்வை அறிவித்த பிரபல நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Advertisement

12th ஃபெயில், செக்டர் 36 மற்றும் ஹசீன் தில்ருபா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சபர்மதி எக்ஸ்பிரஸ் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது. தமிழ் சினிமாவின் சிவகார்த்திகேயன் போல், டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் விக்ராந்த் மாஸி.

‘தூம் மச்சாவோ தூம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 2009ல் வெளிவந்த ‘பாலிகா வது’ என்கிற சீரியல் மூலமாக பிரபலமடைய அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. கடந்த சில வருடங்களாகவே இவரின் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, பாலிவுட்டில் புதிய ஸ்டாராக உயர்ந்தார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த ‘12th ஃபெயில்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதற்கிடையே, தனது சினிமா கேரியர் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த சில வருடங்கள் மிகச் சிறப்பானதாக இருந்தது. நீங்கள் கொடுத்த ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. நான் முன்னோக்கி செல்ல வேண்டிய இந்த நேரத்தில் ஒன்றை உணர்கிறேன். அது, ஒரு கணவனாகவும், ஒரு தந்தையாகவும், ஒரு மகனாகவும் என் வாழ்வை மறு பரிசீலனை செய்வதற்கான நேரமிது, நான் வீட்டுக்கு திரும்ப வேண்டியது நேரமிது என்பது தான்.

எனவே வரும் 2025 ஆம் ஆண்டில், கடைசியாக நாம் ஒருவரையொருவர் சந்திப்போம். காலம் சரியாக இருக்கும் வரை ஓய்வு தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.

விக்ராந்த் மாஸியின் இப்பதிவு அவரின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் நடித்த நடிகை ராக்சி கண்ணா உட்பட பலரும் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விக்ராந்தை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், 37 வயதிலேயே ஓய்வு பெற வேண்டியதில்லை என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version