இந்தியா

ஹாட்ரிக் வெற்றிக்கு முயற்சிக்கும் கெஜ்ரிவால்: ஐ-பேக் உடன் கைகோர்த்த ஆம் ஆத்மி

Published

on

ஹாட்ரிக் வெற்றிக்கு முயற்சிக்கும் கெஜ்ரிவால்: ஐ-பேக் உடன் கைகோர்த்த ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அமோக வெற்றியைப் பதிவு செய்ய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் ஆலோசனைக் குழுவான ஐ-பேக் மீண்டும் டெல்லிக்கு வந்து, வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சிக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம்  மற்றும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் இதை உறுதிப்படுத்தின.ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசியல் ஆலோசனை நிறுவனம் ஆம் ஆத்மியுடன் அதன் கூட்டணியை உறுதிப்படுத்தியது. “வருகிற டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சார உத்திகளை வகுக்க ஆம் ஆத்மி கட்சி உடன்  I-PAC இணைந்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.“இப்போது skeletal team டெல்லி வந்துள்ளது. களத்திலும் டிஜிட்டல் முறையிலும் ஆம் ஆத்மியின் பிரச்சாரத்தை நாங்கள் பார்க்கிறோம்” என்று ஐ-பேக்கை சேர்ந்தவர் ஒருவர் கூறினார். சுமார் 40-50 உறுப்பினர்களைக் கொண்ட குழு அடுத்த வாரம் வருகிறது. இன்னும் குழுக்கள் வருவார்கள். அதைத் தொடர்ந்து நாங்கள் பெரிய அளவில் வேலையைத் தொடங்குவோம். எங்கள் மதிப்பீட்டின்படி, பிரச்சாரம் சுமார் 70-80 நாட்கள் இருக்க வேண்டும் என்றார். கட்சியின் 2020 டெல்லி தேர்தல் பிரச்சாரத்தை நடத்திய ஆம் ஆத்மி குழுவில் I-PAC இருந்தது. தேர்தலில் 70 இடங்களில் ஆம் ஆத்மி 62 இடங்களை வென்றது, மீதமுள்ள இடங்களில் பாஜக வென்றது மற்றும் காங்கிரஸ் எதுவும் பெறவில்லை.ஆங்கிலத்தில் படிக்க:    I-PAC takes the field for AAP in Delhi as Kejriwal gears up for hat-trick bid in face of anti-incumbencyஆம் ஆத்மி கட்சி ஏறக்குறைய 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான நிலையை எதிர்கொள்கிறது மற்றும் வளர்ச்சி மற்றும் குடிமைப் பிரச்சனைகள் முன்னணியில் தோல்வியடைந்ததாகக் கூறப்படும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பெறுகிறது.இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் “புதிய பிரச்சாரம்” வடிவமைக்கப்பட்டுள்ளது என்று I-PAC அதிகாரி கூறினார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version