இந்தியா

Pongal Gift | அடுத்த ஆண்டு பொங்கல் பரிசுப் பணத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

Published

on

Pongal Gift | அடுத்த ஆண்டு பொங்கல் பரிசுப் பணத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை பகுதியை சேர்ந்த சுந்தரவிமலநாதன் என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “ அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்குவது குறித்து, அரசு முடிவு எடுக்க வேண்டும் எனவும், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 தொகையை பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், கடந்த ஆண்டே இதே மனுதாரர், இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்து உள்ளார். மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவின்படி தற்போது வரை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள்?  என  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் ஏன் இதுவரை உத்தரவை நிறைவேற்றவில்லை? தொடர்புடைய அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது? எனவும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

Advertisement

மனுதாரரின் மனு குறித்து, தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 19 ம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version