இந்தியா
School Leave: “வடியாத மழைநீர்” – விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…
School Leave: “வடியாத மழைநீர்” – விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வடியாத மழை நீர் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (டிசம்பர்.04) விடுமுறை என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தால் விழுப்புரம் மாவட்டம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மேலும், விழுப்புரம் நகரில் புதிய, பழைய பேருந்து நிலையம், திருச்சி – சென்னை சாலைகள், கிழக்கு புதுச்சேரி சாலை என நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.
இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியாததால், மாணவர்களின் நலன் கருதி நாளையும் (டிசம்பர்.04) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.