இந்தியா

TASMAC : டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களுக்கு ரூ.10 எப்போது அமல்? தமிழக அரசு பதில்

Published

on

TASMAC : டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களுக்கு ரூ.10 எப்போது அமல்? தமிழக அரசு பதில்

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement

மலைவாசஸ்தலங்களில் மது பாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு 10 ரூபாயை திருப்பிக் கொடுக்கவும் வகை செய்யும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மலைப்பகுதிகளில் அமல்படுத்த உத்தரவிட்டது. பின், இந்த திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு 45 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அதில் 15 கோடி ரூபாயை வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Also Read :
நிவாரணம் வழங்க ஏன் நேரில் வரவில்லை? விஜய் விளக்கம்

Advertisement

மேலும் காலி பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டம் ஏப்ரல் மாதம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் காரணமாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி நான்காம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version