இலங்கை
அதிக விலைக்கு ஏலம் போன புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி! எவ்வளவு தெரியுமா?
அதிக விலைக்கு ஏலம் போன புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி! எவ்வளவு தெரியுமா?
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என எல்லோராலும் அழைக்கப்படும் அவுஸ்திரேலிய வீரர் சேர் டொன் பிராட்மெனின் புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி தற்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பச்சை நிற தொப்பி இந்திய மதிப்பில் ரூ. 2.6 கோடிக்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தொப்பியை 1947 – 1948 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர் சேர் டொன் பிராட்மென் அணிந்திருந்தார்.
டொன் பிராட்மென் அவுஸ்திரேலியாவுக்காக 1928ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் விளையாடினர்.
இதில் 52 டெஸ்ட் போட்டிகள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.