இந்தியா

அன்று துணை முதலமைச்சர்.. இன்று காவலர்.. தண்டனையால் பாத்திரம் கழுவிய முன்னாள் அமைச்சர்கள்!

Published

on

அன்று துணை முதலமைச்சர்.. இன்று காவலர்.. தண்டனையால் பாத்திரம் கழுவிய முன்னாள் அமைச்சர்கள்!

Advertisement

பஞ்சாபில் 2007 முதல் 2012 வரை ஷிரோமணி அகாலி தள் ஆட்சியில் இருந்தது. அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதலமைச்சராகவும், அவரது மகனான சுக்பீர் சிங் பாதல் துணை முதலமைச்சராகவும் இருந்தனர். 2007-ஆம் ஆண்டு சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மத நிந்தனை வழக்கில் மன்னிப்பு வழங்கப்பட்டது.

இது குறித்து சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் விசாரணை நடத்தியது. இதில், பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு பொற்கோவில் சமையலறையில் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும், பக்தர்களின் காலணிகளை துடைக்க வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement

தண்டனையை ஏற்கும் விதமாக சுக்பீர் சிங் பாதல் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு காவலராகப் பணியாற்றினார். அவரது ஆதரவாளர்கள் சமையலறையில் பாத்திரங்களையும் கழிவறைகளையும் சுத்தம் செய்தனர்.

பிரகாஷ் சிங் பாதல் மறைந்துவிட்டதை அடுத்து, அவருக்கு முன்பு வழங்கப்பட்ட “சீக்கிய சமுதாயத்தின் பெருமை” எனும் பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version