பொழுதுபோக்கு
அம்பிகா- ராதாவுக்கு சென்னையில் பல்லாயிரம் கோடி ரூபாய் நிலத்தை எம்.ஜி.ஆர் கொடுத்தாரா? சினிமா பிரபலம் விளக்கம்
அம்பிகா- ராதாவுக்கு சென்னையில் பல்லாயிரம் கோடி ரூபாய் நிலத்தை எம்.ஜி.ஆர் கொடுத்தாரா? சினிமா பிரபலம் விளக்கம்
எம்.ஜி.ஆர் தமன்ழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது சென்னையில் உள்ள ஏ.ஆர்.எஸ் கார்டனை நடிகைகள் ராதா மற்றும் அமபிகாவுக்கு இலவசமாக கொடுத்தாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து பிரபல நடிகரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் விளக்கம் அளித்துள்ளார்.தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். சினிமாவில், ஆட்சி செய்த அவர், ஒரு கட்டத்தில் தனி கட்சி தொடங்கி அரசியலில் தொடர்ந்து 3 முறை முதல்வராக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். நடிகராக இருந்தபோது, அரசியலுக்கு வந்தபோதும், தனது வாழ்நாளில் பலருக்கு உதவி செய்துள்ள எம்.எஜி.ஆர் இன்றும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறார்.இந்நிலையில், கேரளாவை சேர்ந்த பிரபல நடிகைகளாக இருக்கும் ராதா மற்றும் அம்பிகா இருவரும் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். ராதா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும், அவரது சகோதரி அம்பிகா தற்போது சினிமாவில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சீரியல்களிலும் நடித்து திரைத்துறையில் தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சென்னையில் ராதா அம்பிகா இருவரும் ஏ.ஆர்.எஸ்.கார்டனை வாங்கியபோது முதல்வர் எம்.ஜி.ஆர் அதனை அவர்களுக்கு இலவசமாக கொடுத்த்தாகவும், இன்றைய மதிப்பில் அந்த இடம் பல ஆயிரம் கோடி போகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும்நிலையில், நடிகரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.ராதா அம்பிகா அந்த ஏ.ஆ.எஸ்.கார்டனை வாங்கியபோது தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். அப்போது அந்த இடத்தை அவர் இலசவமாக கொடுத்திருந்தால் அப்போது எதிர்கட்சியாக இருந்தவர்கள் சும்மா விட்டிருப்பார்களா, அதுவும் இல்லாமல், அந்த ஏ.ஆர்.எஸ்.கார்டன் அரசு நிலம் இல்லை. தனியாருக்கு சொந்தமான நிலம். அந்த தனியாரிடம் இருந்துதான் ராதா அந்த இடத்தை வாங்கினார். இந்த இடத்திற்கு அருகில் இருக்கும் இடத்தை வாங்கியவர் இயக்குனர் பாரதிராஜா. இருவரும் இணைந்துதான் அந்த இடத்தை வாங்கினார்கள்.மேலும் இந்த இடம் மொத்தமாக ஒன்னே முக்கால் ஏக்கர்தான் இன்றைய காலக்கட்டத்தில் இந்த ஒன்னே முக்கால் ஏக்கர் எப்படி பல ஆயிரம் கோடி போகும் என்று சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். இந்த விளக்கம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“