உலகம்

இந்தியா குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய பில் கேட்ஸ்!

Published

on

இந்தியா குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய பில் கேட்ஸ்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 04/12/2024 | Edited on 04/12/2024

மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில் கேட்ஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வருகிறார். இவர், அமெரிக்க பிரபல எழுத்தாளரும், ‘லிங்க்டு இன்’ தளத்தின் இணை நிறுவனருமான ரீட் காரெட் ஹாஃப்மேனுக்கு நேர்காணல் மூலம் பேட்டி அளித்தார். 

அப்போது, பில் கேட்ஸிடம் ஏராளமான கேள்வி கேட்ட  ரீட் காரெட் ஹாஃப்மேன், இந்தியா குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பில் கேட்ஸ், “பல கடினமான விஷயங்கள் இருக்கும் ஒரு நாட்டிற்கு இந்தியா ஒரு உதாரணம்.  சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன. அவை போதுமான அளவு நிலையாக உள்ளன. அவர்களின் அரசாங்க வருவாயை போதுமான அளவு உருவாக்கினால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் வியத்தகு முறையில் சிறப்பாக இருப்பார்கள்.

Advertisement

இந்தியா ஒரு வகையான ஆய்வகம். ஒரு விஷயத்தை இந்தியாவில் நிரூபித்துவிட்டால், அந்த விஷயத்தை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். அதனால் தான், அறக்கட்டளைக்கான எங்கள் மிகப்பெரிய அலுவலகம் அமெரிக்கா அல்லாத இந்தியாவில் உள்ளது. நாங்கள் செய்து வரும் பைலட் ரோல்அவுட் திட்டங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் உள்ள எங்கள் பங்குதாரர்களுடன் தான் செய்து வருகிறோம். நீங்கள் அங்கு சென்றாலும், நீங்கள் ஒருபோதும் சென்றிருக்கவில்லை என்றாலும், இது ஒரு குழப்பமான இடம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் உற்சாக உணர்வைப் பெறுவீர்கள்” என்று கூறினார். 

பில் கேட்ஸின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ளவர்களை பரிசோதனைக்கானவர்கள் என்று பில் கேட்ஸ் கருதுகிறாரா? என்று இந்திய மக்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • துரை வைகோவின் கேள்வி… ரயில்வே துறை அமைச்சரின் வித்தியாசமான பதில்!

  • ‘இலவச பேருந்தில் பெண்களிடம் கட்டணம் வசூல்’-கொதித்தெழுந்த பெண்கள்

  • இந்தியா குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய பில் கேட்ஸ்!

  • மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர் மீது பாய்ந்த துப்பாக்கிக் குண்டு

  • விமர்சனத்திற்கு மத்தியில் விஜய்யை பாராட்டிய சீமான்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version