இந்தியா
கிச்சன் கீர்த்தனா: சோளம் கம்பு பூண்டு ரொட்டி
கிச்சன் கீர்த்தனா: சோளம் கம்பு பூண்டு ரொட்டி
குளிர்காலத்தில் சூடான உணவு மட்டுமல்லாமல் சத்தான உணவும் அவசியம். அதற்கு சுவையான இந்த சோளம் கம்பு பூண்டு ரொட்டி உதவும். சோளத்திலும் கம்புவிலும் அதிகமான புரதம், தாமிரம், இரும்பு சத்துகள் உள்ளன. மேலும் மெக்னீசியம், கால்சியம் சத்துகளும் இருப்பதால் உடலுக்குத் தேவையான எனர்ஜியும் கிடைக்கும்.
சோள மாவு – அரை கப்
கம்பு மாவு – அரை கப்
பூண்டுத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகு – 6
உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப
சோள மாவு மற்றும் கம்பு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் பூண்டுத்தூள், நொறுக்கப்பட்ட மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். சிறிய உருண்டைகளாகப் பிரித்து, தட்டையாகத் தேய்த்துக்கொள்ளவும். ஒரு கடாயைச் சூடாக்கி, ரொட்டியைப் போட்டு சுட்டெடுக்கவும். ஆரோக்கியமான சோளம் கம்பு பூண்டு ரொட்டி தயார். குருமாவுடன் சூடாகப் பரிமாறவும்.