இந்தியா

சேலம்- ஏற்காடு சாலை சீரமைப்பு… இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதி..!!

Published

on

சேலம்- ஏற்காடு சாலை சீரமைப்பு… இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதி..!!

ஏற்காட்டில் மலைப்பாதை சீரமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி.

Advertisement

ஃபெஞ்சல் புயலால் சேலம் மாவட்டத்தில் மட்டும் 1245.8மிமீ மழைப்பதிவாகியுள்ளது. இதன்படி ஏற்காட்டில் மட்டும் அதிகபட்சமாக 243.5 மில்லி மீட்டர் கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்காடு மலை பாதையில் கடும் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஏற்காடு வர வேண்டாம் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.

கடந்த 4 தினங்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஏற்காடு கிராமவாசிகள் பெரிதும் துன்பத்திற்குள்ளாகினர். இதனையடுத்து மலைப்பாதை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருந்தது.

இதனையடுத்து போக்குவரத்து சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றதால், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சேலம்- ஏற்காடு பிரதான சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டு இன்று (04.12.2024) பிற்பகல் 3 மணி முதல் போக்குவரத்துக்கு இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version