இலங்கை
தம்பதிகள் கழுத்தறுத்து படுகொலை ; சந்தேகநபர் கைது
தம்பதிகள் கழுத்தறுத்து படுகொலை ; சந்தேகநபர் கைது
அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹென்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து தம்பதிகள் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைகள் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபர் நேற்று (03) காலி கோட்டை பகுதியில் வைத்து அஹங்கம பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.