உலகம்

 தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இளம் நடிகை; ஆண் நண்பர் கண்முன்னே நேர்ந்த சோகம்

Published

on

 தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இளம் நடிகை; ஆண் நண்பர் கண்முன்னே நேர்ந்த சோகம்


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 04/12/2024 | Edited on 04/12/2024

ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் பிரபல நடிகை கமிலா பெலியாட்ஸ்காயா(24). இளம் நடிகையான இவர் தனது ஆண் நண்பருடன் தாய்லாந்திற்கு இன்பச் சுற்றுலாச் சென்றுள்ளார். கழ்​பெற்ற சுற்றுலாத்​தலமான கோ ஸமுய் கடற்​கரைக்​குச் சென்ற கமிலா பெலியாட்ஸ்காயா பாறையில் அமர்ந்து தனது கண்களை மூடி யோகா செய்துள்ளார். அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென வந்த ராட்சத அலை ஒன்று யோக செய்துகொண்டிருந்த நடிகை கமிலா பெலியாட்ஸ்காயாவை இழுத்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து அலறித் துடித்த அக்கம்பக்கத்தினர் நடிகையை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், எந்த முயற்சியில் பலனளிக்காததால் சிறுது நேரம் கழித்து, நடிகை கமிலா பெலியாட்ஸ்காயா கடலில் தத்தளித்து நீரில் முழ்கி உயிரிழந்தார்.

Advertisement

இதையடுத்து  நடிகை கமிலா பெலியாட்ஸ்காயா இழுத்துச் செல்லப்பட்ட இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில்  சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை கமிலா பெலியாட்ஸ்காயாவை கலை அலை இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • மீளும் வட மாவட்டங்கள்; நாளை எங்கெல்லாம் விடுமுறை-வெளியான அறிவிப்பு

  •  தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இளம் நடிகை; ஆண் நண்பர் கண்முன்னே நேர்ந்த சோகம்

  • “இது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல…” – ராகுல் காந்தி ஆவேசம்!

  • ‘அந்த விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது’-முதல்வர் கடும் தாக்கு  

  • “மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார் முதல்வர் ” – அமைச்சர் ஐ.பெரியசாமி

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version