இலங்கை

தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் மீது அவதானம் செலுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு

Published

on

தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் மீது அவதானம் செலுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்கொரிய ஜனாதிபதியினால் அங்கு அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் வலுப் பெற்றுள்ளன.

Advertisement

பின்னர் குறித்த சட்டத்தைத் தளர்த்துவதற்கான யோசனை தென்கொரிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அதேநேரம், குறித்த சட்டத்தைத் தளர்த்துவதாக தென்கொரிய ஜனாதிபதியும் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அங்குள்ள பல தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளதுடன் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

Advertisement

இந்தநிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்படுமாயின் அங்குள்ள இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version