உலகம்

தென் கொரிய வான் பரப்பில் சீன, ரஷ்ய யுத்த விமானங்கள்!

Published

on

தென் கொரிய வான் பரப்பில் சீன, ரஷ்ய யுத்த விமானங்கள்!

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு வலயத்தினுள் ஐந்து சீன இராணுவ விமானங்களும், ஆறு ரஷ்ய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது. சுமார் 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு வலயதிற்குள் வட்ட மிட்ட 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.

முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்ததற்குதென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.

Advertisement

சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் ஊடுருவுவது சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி இடம் பெறக்கூடியதாக உள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version