இந்தியா

பங்களாதேஷ் துணைதூதரக பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது!

Published

on

Loading

பங்களாதேஷ் துணைதூதரக பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது!

பங்களாதேஷ் துணைதூதரகத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஏழுபேரை இந்தியாவின் திரிபுரா மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பங்களாதேஷ் துணைதூதரகத்தின் முன்வாயிலை உடைத்த சிலர் சொத்துக்களுக்களை சேதப்படுத்தியதுடன் பங்களாதேஷ் கொடியை சேதப்படுத்தினார்கள் என அரசாங்கம் தெரிவித்ததை தொடர்ந்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

பங்களாதேஷில் இந்துமத தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்துமதத்தை பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ள இந்து சங்காச சமிதி என்ற அமைப்பை சேர்ந்தவர்களே கைது இவ்வாறு செய்ய்ப்பட்டுள்ளனர்.

சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் முன்வாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பங்களாதேஷ் கொடியை கிழித்துள்ளனர் எனவும் துணைதூதரகத்திற்கு வெளியே சுமார் 4000 பேர் போராட்டங்களில் ஈடுபட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version