சினிமா

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பிய படங்களின் OTT ரிலீஸ் தேதி இதோ..

Published

on

Loading

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பிய படங்களின் OTT ரிலீஸ் தேதி இதோ..

தென்னிந்திய சினிமாவில் இந்த மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படம் காணப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாஸில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.இந்த நிலையில், ஓடிடியிலும் எக்கச்சக்கமான படங்கள் வெளியாவதற்கு தயாராக உள்ளன. அதன்படி இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பதை விரிவாக பார்ப்போம்.அதன்படி அக்டோபர்  மாதம் வெளியான திரைப்படம் தான் அமரன். மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக  நடித்து இருந்தார். இந்த படம் சிவகார்த்திகேயனின்  சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக காணப்பட்டதோடு சுமார் 300 கோடிகளை வசூலித்து இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்தப் படம் எதிர்வரும் ஐந்தாம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.d_i_aஇதைத்தொடர்ந்து வாசன் பாலா இயக்கத்தில் உருவான ஜிக்ரா படமும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்றது. இந்த படம் டிசம்பர் ஆறாம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. மேலும் இதே தளத்தில் விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ வெளியாகிறது.தேசிய விருது இயக்குனர் ராகுல் தோலாக்கியா இயக்கத்தில் அக்னி படம் வெளியானது. இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இதில் பிரதிக் காந்தி மற்றும் திவ்யேந்து நடித்துள்ளனர். இந்தப் படமும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.மேலும் டிசம்பர் 5ஆம் தேதி அமேசன் பிரைம் வீடியோவில் வரும் தேஜா ஹீரோவாக நடித்த மட்கா படமும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தனவ் சீசன் 2 வெளியாகிறது.இறுதியாக திகில் நிறைந்த பிளாக் டவுஸ் படம் டிசம்பர் 5ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனால் இந்த மாதத்தின் முதல் வாரம் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version