இந்தியா
புயல் நிவாரணப் பணிகளுக்கு முதல் ஆளாக 10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்.. வேற நடிகர்கள் டிவி பார்ப்பீங்களா?
புயல் நிவாரணப் பணிகளுக்கு முதல் ஆளாக 10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்.. வேற நடிகர்கள் டிவி பார்ப்பீங்களா?
தமிழ் நாட்டில் புயல் இன்னும் ஓயவில்லை. சென்னை, புதுச்சேரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடும் செதம் விளைவித்துள்ளது.
வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட மாவட்டங்களில் மின் பாதிப்பு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சிறப்பு முகாம்கள் நடத்தி, நிவாரண உதவிகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த சிவகார்த்திகேயன் நிவாரணப் பணிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில், “பென்ஜால் புயல் கனம் மழையைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசு மேற்கொண்டும் வரும் மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணி நிற்கும் விதமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்திற்கான காலோலையை வழங்கிய அவருக்குக் அன்பும் நன்றியும்’’ என்று தெரிவித்துள்ளார்.
நேற்று விஜய் தனது அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கினர். இன்று நடிகர் சிவகார்த்திகேயனும் நிதி யுதவி செய்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமா நட்சத்திரங்களும் புயல் & கனமழை பாதிப்புக்கு நிவாரண உதவி வழங்குவார்கள் என தெரிகிறது.