இலங்கை

மாகாண சபைகள் முறைமைகள் நீக்கப்படும்! கருத்தை முற்றாக மறுத்த ரில்வின் சில்வா

Published

on

மாகாண சபைகள் முறைமைகள் நீக்கப்படும்! கருத்தை முற்றாக மறுத்த ரில்வின் சில்வா

புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 மாறாக மாகாண சபை முறை எவ்வித கலந்துரையாடல்களுமின்றி ஒழிக்கப்படும் என நான் ஒருபோதும் கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

 இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அண்மையில் அவர் தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

 இந்த செய்தியில், ”தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாகக் கூறிய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். 

Advertisement

நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இருப்பினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் ஊடாக நாட்டில் நடைமறைப்படுத்தப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை.

 மாறாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகின்றது.

Advertisement

எனவே, பயனற்ற மாகாண சபை முறைமைக்குப் பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும், அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையைப் பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது.

 இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம்.

நடைமுறையில் உள்ள பழைமை வாய்ந்த அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு உருவாக்குவது முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகின்றோம்.

Advertisement

 புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13ஆவது அரசமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது.” என ரில்வின் சில்வா கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில், இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டில்வின் சில்வா,

வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987இல் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் தவறியுள்ளது. அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது. 

Advertisement

அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13ஆவது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை என்றே நான் கூறினேன்.

மேற்படி புதிய தீர்வுகள் எதிர்காலத்தில் கலந்துரையாடலுக்கு இலக்காக்கப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். அந்த தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மெழிவுகளை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்படும். எனது செய்தி திரிவுபடுத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version