சினிமா

முன்னாள் கணவரின் திருமணம் குறித்து சமந்தாவின் இன்ஸ்ட்டா பதிவு.. நாக சைதன்யாவை மொத்தமாய் வெறுத்த ரசிகர்கள்

Published

on

முன்னாள் கணவரின் திருமணம் குறித்து சமந்தாவின் இன்ஸ்ட்டா பதிவு.. நாக சைதன்யாவை மொத்தமாய் வெறுத்த ரசிகர்கள்

முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் திருமண நாளான இன்று நடிகை சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டா பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு மொழியில் நடிக்கும்போது நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவுக்கு இடையே காதல் ஏற்பட்டுவிட்டது.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மஜ்லி திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. 2017 ஆம் ஆண்டு இந்த ஜோடி கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். சூர்யா ஜோதிகாவுக்கு பிறகு தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர்கள் தான் நாக சைதன்யா மற்றும் சமந்தா.

Advertisement

ஆனால் நான்கே வருடங்களில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரியப் போகிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். ஆரம்பத்தில் சமந்தா சினிமாவில் அத்துமீறி நடிப்பதால் தான் இந்த பிரிவு என பேசப்பட்டது.

அதன் பின்னர் தான் பொறுமையாக நடிகை சோபிதா தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என வதந்தி கிளம்பியது. தற்போது வதந்தி உண்மையாகும் அளவுக்கு இன்று அதிகாரப்பூர்வமாக சோபிதா தூலிபாலா சோபிதா அக்கினேனியாக மாற இருக்கிறார்.

நாக சைதன்யாவின் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி தான் சமந்தாவின் தந்தை காலமானார். இன்று நாக சைதன்யாவுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார் சமந்தா.

Advertisement

அதில் ஒரு குத்துச்சண்டை போட்டியில் ஒரு சின்ன பையன் மற்றும் ஒரு பெண் குத்துச்சண்டையில் ஈடுபடுகிறார்கள். அந்த குட்டி பெண் தொடர்ந்து அந்தப் பையனிடம் ஜெயிக்க போராடுகிறாள். இந்த வீடியோவை போட்டு ஃபைட் லைக் எ கேர்ள் என கேப்சன் பதிவிட்டு இருக்கிறார் நடிகை சமந்தா.

விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார். ஆனால் சமந்தா இன்னும் சிங்கிளாகவே இருப்பதால் நிஜமாகவே இவர் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என இப்போது நாக சைதன் யாவை எல்லோரும் வசைப்பாடி வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version