இலங்கை

யாழில் 34 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஆலயத்தில் ஆளுநர் வழிபாடு!

Published

on

யாழில் 34 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஆலயத்தில் ஆளுநர் வழிபாடு!

  யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று (4) இடம்பெற்ற வழிபாடுகளில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டார்.

ஆளுநருடன் , யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

இதன்போது ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதேவேளை யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இன்றுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றார். 

Advertisement

ஜனாதிபதியாக அனுரகுமார பதவியேற்ற பின் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 34 வருடங்களின் பின் மக்களை செல்ல அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version