வணிகம்

2 தையல் இயந்திரங்களுடன் தொடங்கிய வாழ்க்கை.. இன்று 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம்!

Published

on

2 தையல் இயந்திரங்களுடன் தொடங்கிய வாழ்க்கை.. இன்று 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம்!

Advertisement

அனிதாவின் தாயாரும் ஒரு தையல் கலைஞரே. அவர் தைக்கும் ஆடைகளை தான் சிறு வயதில் அனிதா அணிந்திருப்பார். தாயார் ஆடை தைப்பவர் என்பதால், இளம் வயதிலேயே படைப்பாற்றல் மற்றும் நம்மிடம் உள்ளதை வைத்து எப்படி திறம்பட வேலை செய்ய வேண்டும் என்பதை பார்த்து வளர்ந்துள்ளார் அனிதா. இந்த அணுபவங்கள் யாவும் சிறு வயதிலேயே கிடைத்ததால், ஆடை வடிவமைப்பின் மீது அவருக்கு இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் இதுவே அவரது லட்சியமாகவும் மாறியது. பணிபுரியும் பெண்களுக்கு ஏற்ற விலை குறைவான, ஸ்டைலான ஆடைகளுக்கான இடைவெளி சந்தையில் அதிகமாக இருப்பதைக் கண்ட அவர், நாம் இதை பூர்த்தி செய்யக் கூடாது என முடிவெடுத்தார் அனிதா.

தனது தந்தை மற்றும் சகோதரியிடம் இருந்து கடனாக சிறிய தொகையை பெற்று, அனிதா தனது தொழில் முனைவோர் பயணத்தை 1995-ம் ஆண்டு தொடங்கினார். ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவர்கள் பெண்களுக்கான மேற்கத்திய உடைகளை வடிவமைத்தனர். மால்கள் மற்றும் பெரிய பிராண்டுகளிடம் இருந்து பல நிராகரிப்புகள் இருந்தபோதிலும், அனிதாவின் நம்பிக்கை உறுதியாக இருந்தது. தனது சொந்த பாதையை உருவாக்க தீர்மானித்த அவர், தனது முதல் பிராண்டான AND-யை அறிமுகப்படுத்தினார். இது ஃபேஷன் உலகில் அவரது ஏற்றத்திற்கான தொடக்கமாக அமைந்தது.

ஒரு சிறிய தொழிலாக ஆரம்பித்தது, காலப்போக்கில் அனிதா டோங்ரேயின் புகழ்பெற்ற இல்லமாக மலர்ந்தது. தற்போது நேர்த்தி மற்றும் புதுமைக்கு மறுபெயராக இது உள்ளது. குளோபல் தேசி, அனிதா டோங்ரே பிரைடல் கோச்சர், கிராஸ்ரூட் மற்றும் பிங்க் சிட்டி போன்ற பல லேபிள்களை உள்ளடக்கியதாக அவரது போர்ட்ஃபோலியோ விரிவடைந்தது.

Advertisement

இன்று, இந்தியா முழுவதும் 270-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருவதோடு 2023-ல் ரூ.1,000 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளது. அனிதா டோங்ரே தொழில்துறையில் ஒரு முன்னோடியாக திகழ்கிறார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்கார பெண் ஆடை வடிவமைப்பாளராக அங்கீகரிக்கப்பட்ட அவரது தற்போதைய சொத்து மதிப்பு $10 மில்லியன் (சுமார் ரூ.83.21 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

டோங்ரேயின் இந்தப் பயணம் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, ஆர்வம் மற்றும் பாரம்பரியமாக வகுக்கப்பட்ட எல்லைகளை கடந்து செல்லும் அவரது சக்தியை எடுத்துக்காட்டுகிறது. கடந்த தீபாவளி அன்று, சிறப்பு தீபாவளி பார்பி பதிப்பை வடிவமைத்திருந்தார் அனிதா.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version