இந்தியா

2026ல் ஆட்சியைப் பிடிக்குமா TVK.? விஜய்க்கு ஆதரவு உண்டா.? மெகா சர்வே

Published

on

2026ல் ஆட்சியைப் பிடிக்குமா TVK.? விஜய்க்கு ஆதரவு உண்டா.? மெகா சர்வே

விஜய்யின் அரசியல் நகர்வுகள் தான் இப்போது பரபரப்பை கிளப்பி வருகிறது. அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு இருந்தது. கட்சி ஆரம்பித்த பிறகு யாருடன் அவர் கூட்டணி அமைப்பார் யார் அரசியல் எதிரி என்ற கேள்வி எழுந்தது.

அதேசமயம் நாம் தமிழர் கட்சி ஆதரவை கொடுத்து கூட்டணிக்கு அடி போட்டனர். ஆனால் சமீபத்தில் நடந்த முதல் மாநில மாநாடு பல திருப்பங்களை ஏற்படுத்தியது. முதலில் ஆதரித்த நாம் தமிழர் கட்சி இப்போது விஜயின் கொள்கைகளையும் தத்துவங்களையும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

Advertisement

அதேபோல் அவர் தன்னுடைய அரசியல் எதிரி ஆளும் கட்சி தான் என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டார். இந்த சூழலில் 2026 தேர்தலில் இந்த கட்சி ஆட்சியை அமைக்குமா என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

அதைத்தொடர்ந்து பிரபல நாளிதழ் எடுத்த சர்வே பற்றி இங்கு காண்போம். அதில் 30 சதவீத மக்கள் TVK அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும் என பேசப்பட்டது.

ஆனால் இந்த சர்வேயில் வெறும் 8% மக்கள் மட்டுமே அதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். மேலும் தற்போது விஜய்க்கு இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது இளம் வாக்காளர்களில் ஆண்கள் 63 சதவீதம் பேர் வாக்கு அளிப்போம் என கூறியுள்ளனர்.

Advertisement

பெண்களைப் பொறுத்தவரையில் 76% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் கூறும் ஒரே காரணம் அரசியல் மாற்றம் வேண்டும் என்பதுதான். அது மட்டும் இன்றி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு கிருஷ்ணகிரி தர்மபுரி நாமக்கல் கன்னியாகுமரி திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சிக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது.

அதேபோல் மயிலாடுதுறையில் சரிசமமான ஆதரவு உள்ளது. மேலும் திருவண்ணாமலையில் 70% ராமநாதபுரம் 60% திருவாரூர் 55 சதவீதம் பேர் விஜய்க்கு வாக்களிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இப்படியாக தற்போதைய கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் தேர்தல் சமயத்தில் இவர்களுடைய அரசியல் வியூகம், கூட்டணி, பிரச்சார யுக்தி, தேர்தல் அறிக்கை ஆகியவற்றை பொறுத்துதான் இக்கட்சிக்கான ஆதரவை கணிக்க முடியும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version