விளையாட்டு
8 மாவட்டங்களுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி… அனல் பறக்க மோதிக்கொண்ட போட்டியாளர்கள்…
8 மாவட்டங்களுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி… அனல் பறக்க மோதிக்கொண்ட போட்டியாளர்கள்…
8 மாவட்டங்களுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி… அனல் பறக்க மோதிக்கொண்ட போட்டியாளர்கள்…
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி இறகுப் பந்து கழகம் மற்றும் ஜிம்கானா கிளப் சார்பில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. 8 மாவட்டங்கள் கலந்து கொண்ட இந்த இறகுப் பந்து போட்டியானது தூத்துக்குடி ஜிம்கானா கிளப் மற்றும் தருவை மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இறகு பந்து போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களிலிருந்து சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் சேர்த்து 300 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து பிரேம் வெற்றி கூறுகையில், “தூத்துக்குடி இறகுப் பந்து கழகம் மற்றும் ஜிம்கானா கிளப் சார்பில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற முதல் பிரிவு போட்டிகளில் ஆண்கள், பெண்கள், தனிநபர் போட்டி, இரட்டையர் போட்டிகள் நடைபெற்றது.
ஆண்களுக்கு 11 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள், 13 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள், 15 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள், 17 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது மற்றும் பெண்களுக்கு 13 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள், 15 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் என பிரிவினருக்கு நடைபெற்றது.
இதில் முதல் இடம் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.4,000 ரொக்கப் பணம் மற்றும் கோப்பையும் மற்றும் இரண்டாம் இடத்திற்கு ரூ.2,000 ரொக்கப் பணம் மற்றும் கோப்பையும், மற்றும் மூன்றாம் இடத்திற்கு ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் கோப்பையும் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.