வணிகம்

Annual Life Certificate: வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க உதவும் எளிய வழிகள்!

Published

on

Annual Life Certificate: வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க உதவும் எளிய வழிகள்!

Advertisement

ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் தங்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் தங்களின் வருடாந்திர ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது முக்கியமானது. இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

வருடாந்திர ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க இது மிகவும் பொதுவான வழியாகும். இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-ன் இரண்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள வங்கியின் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர் தனது பென்ஷனை பெறுகிறார் என்றால், அவர் தனது ஆயுள் சான்றிதழை வங்கி அதிகாரியிடம் கையொப்பம் வாங்கி சமர்ப்பிக்கலாம். இதன் பொருள் அவர்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை.

Advertisement

வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள் இந்தியாவுக்கு வர இயலவில்லை என்றால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்ஸ்களை கொண்டு தங்கள் சார்பாக அவர்களை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வைக்கலாம். எனினும் இப்படி சமர்பிக்கும் சான்றிதழில் மாஜிஸ்திரேட், நோட்டரி, பேங்க்கர் அல்லது இந்திய தூதரகப் பிரதிநிதி கையொப்பமிட வேண்டும். இந்த செயல்முறை ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வார் வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கிறது.

Advertisement

ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க எளிதான மற்றும் மிகவும் பிரபலமான வழி டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் ஆகும். ஒருவர் தனது டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்டை ஆன்லைனில் சமர்ப்பிக்க ஜீவன் பிரமான் சிஸ்டமை பயன்படுத்தலாம். இந்த டிஜிட்டல் சிஸ்டம் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்துகிறது மற்றும் jeevanpramaan.gov.in-இதற்காக பயன்படுத்தலாம். அரசின் ஜீவன் பிரமான் வெப்சைட்டில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகார அமைப்பு மூலம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை ஆன்லைனில் வழங்கலாம்.

இந்தியாவுக்கு செல்ல முடியாத ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், தாங்கள் வசிக்கும் நாட்டில் இருக்கும் இந்திய தூதரகம் அல்லது துணை தூதரகத்தில் தங்களுடைய ஆயுள் சான்றிதழை வெரிஃபை செய்து கொள்ளலாம். தூதரகம் அல்லது துணைத் தூதரகம் குறிப்பிட்ட நபரின் பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (PPO) அல்லது பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தின் அடிப்படையில் அவர்களின் அடையாளத்தை சரிபார்க்கும். சரிபார்க்கப்பட்டதும் அவர்கள் குறிப்பிட்ட நபர் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆயுள் சான்றிதழை வழங்குவார்கள்.

Advertisement

ஓய்வூதியம் பெறுபவர் இந்திய தூதரகம் அல்லது துணை தூதரகத்திற்கு நேரில் செல்ல முடியாவிட்டால், தனது ஆவணங்களை தபால் மூலம் மேற்கண்ட அலுவலகங்களுக்கு அனுப்பலாம். இதற்கு உரிய சான்றிதழுடன் நேரில் ஆஜராக இயலவில்லை என்பதை வெளிபடுத்தும் மருத்துவ சான்றிதழை இதற்காக வழங்க வேண்டியிருக்கலாம். இதனை தொடர்ந்து தூதரகம் அல்லது துணைத் தூதரகம் அவர்களின் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க உதவும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version