விளையாட்டு
WTC Finals | வெளியேறியது முக்கிய அணி… சூடு பிடிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்…
WTC Finals | வெளியேறியது முக்கிய அணி… சூடு பிடிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நேரடியாக தகுதிபெற, இந்திய அணி போராடி வரும் நிலையில், முக்கிய அணி வெளியேறியிருப்பது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான தொடரை 4 – 0 அல்லது 5 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து உடனான தொடரின் முதல் போட்டியில், நியூசிலாந்து தோல்வியடைந்துள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இழந்துள்ளது நியூசிலாந்து அணி.
நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. முதல் இன்னிங்சில் 348 ரன்கள் எடுத்த நியூசிலாந்து, இரண்டாவது இன்னிங்சில் 254 ரன்களுக்கு சுருண்டது. ஆனால் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 499 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹேரி ப்ரூக் 171 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இரண்டாவது இன்னிங்சில் விளையாடும்போது, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து. 2 விக்கெட் வித்தியாசத்தில், நான்காவது நாளிலேயே இலக்கை எட்டிப்பிடிக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறிய நிலையில், நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் பறித்துள்ளது இங்கிலாந்து. தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இனி வரும் போட்டியில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணிக்கும், தென் ஆப்பிரிக்கா அணிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆஸ்திரேலியாவுடனான அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கோ, இந்திய அணியை ஆஸ்திரேலியா அணி அனைத்து போட்டிகளிலும் வீழ்த்த வேண்டும். மேலும் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிகா போட்டிகளில் தோல்வி அல்லது டிரா செய்ய வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆஸ்திரேலிய அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும்.