இலங்கை

ஆடைத்தொழிற்சாலை 50 ஊழியர்கள் வைத்தியசாலையில்

Published

on

ஆடைத்தொழிற்சாலை 50 ஊழியர்கள் வைத்தியசாலையில்

  கொழும்பு – கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 50 ஊழியர்கள் ,வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொழிற்சாலை வழங்கிய காலை உணவை உண்ட பின்னர், வியாழக்கிழமை (05) காலை சுகவீனமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

 ஊழியர்கள் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 02 மற்றும் இலக்கம் 03 இல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நோய்வாய்ப்பட்ட ஊழியர்களுக்கு மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார், நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார், சீதுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version