இந்தியா

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவு!

Published

on

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவு!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பதவியேற்பு விழா நாளை மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

பா.ஜ.க சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று மும்பை விதான் பவனில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கான மத்திய பார்வையாளர்களாக மத்திய நிதி அமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனும், குஜராத் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் மற்றும் சண்டிகர் பா.ஜ.க பொறுப்பாளருமான விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஏகமனதாக தெரிவு செய்யப்கபட்டார்.

Advertisement

பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்தியசாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version