சினிமா

இளிச்சவாயன்.. ஏன் தப்பு பண்ணுற.?? அரெஸ்ட்டான மகனுக்கு மன்சூர் கொடுத்த அட்வைஸ்

Published

on

இளிச்சவாயன்.. ஏன் தப்பு பண்ணுற.?? அரெஸ்ட்டான மகனுக்கு மன்சூர் கொடுத்த அட்வைஸ்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஆக காணப்படும்  மன்சூர் அலிகானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 7 பேரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்போது மகன் சிறைக்கும் செல்ல முன்பு அங்கு வந்த மன்சூர் அலிகான் அவருக்கு புத்திமதி கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான பேட்டிகள் வைரல் ஆகி வருகின்றன.d_i_aஅதன்படி அவர் கூறுகையில், கஞ்சா எல்லாம் அடிக்க கூடாது.. ஏன் தப்பு பண்ணுற.. தைரியமாக இரு.. புத்தகங்கள் படி.. நிறைய புத்தகங்கள் படி.. தெம்பா தைரியமா இரு.. கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரெஸ்ட் பண்ணும் என்று தெரியாதா? என்று தனது மகனுக்கு அட்வைஸ் பண்ணி உள்ளார்.மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கஞ்சா வியாபாரிகளிடம் எனது மகனின் நம்பர் இருந்ததாக எனது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். எனது தொலைபேசியிலும் பல நடிகைகளின் நம்பர் உள்ளது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் எப்படி கிடக்கின்றது. மதுவை ஒழிக்க வேண்டும் என்று நான் எடுத்த படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை. மதுவை சட்டத்தின் மூலம் தடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும். தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version