இலங்கை

ஏறாவூரில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு… சிக்கிய முக்கிய குற்றவாளிகள்!

Published

on

ஏறாவூரில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு… சிக்கிய முக்கிய குற்றவாளிகள்!

ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்றிரவு (04-12-2024) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

மட்டக்களப்பில் பல குற்ற செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதேசத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்ற நியாயதிக்க எல்லையிலுள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்து பின்னர் நீதிமன்றங்களுக்கு ஆஜராகாமல் இருந்தவர்களுக்கே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

   

இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியவர்களை கண்டறிவதற்காக முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version