தொழில்நுட்பம்
ஐபோனில் இருக்கும் டேட்டாக்களை Mac அல்லது PCக்கு ஈஸியா மாற்றுவது எப்படி…?
ஐபோனில் இருக்கும் டேட்டாக்களை Mac அல்லது PCக்கு ஈஸியா மாற்றுவது எப்படி…?
ஐபோன் யூசர்களுக்கு ஸ்டோரேஜ் என்பது எப்போதும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஒருவேளை உங்களிடம் ஐபோன் இருந்தால் ஸ்டோரேஜ் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது என்ற நோட்டிஃபிகேஷன் அடிக்கடி உங்கள் சாதனத்தில் வந்திருக்கலாம். இதற்கு நீங்கள் உங்களுடைய செட்டிங்ஸில் உள்ள ஸ்டோரேஜை நிர்வகிக்க வேண்டும். ஆனால் இதற்காக நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள், இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை டெலீட் செய்ய முடியாது. இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய டேட்டாவை ஐபோனில் இருந்து மேக் அல்லது PCக்கு பேக்கப் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் பெரிய ஃபைல்களை கூட பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கலாம்.
முதலில் உங்களுடைய ஸ்மார்ட்போனை ஒரு USB கேபிள் பயன்படுத்தி மேக்குடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
“அலவ் யுவர் ஆக்சஸரி டு கனெக்ட் டு யுவர் கம்ப்யூட்டர்” என்ற நோட்டிஃபிகேஷன் ஐபோனில் காண்பிக்கப்படும். இதற்கு நீங்கள் ‘அலவ்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களுடைய ஐமேக் அல்லது மேக்புக்கில் உள்ள போட்டோஸ் அப்ளிகேஷனை திறக்கவும்.
உங்களுடைய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மேக்கில் எங்கு சேமிக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான லொகேஷனை தேர்வு செய்யுங்கள்.
இப்போது நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்ய நினைக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தேர்வு செய்யவும்.
இதற்காக நீங்கள் தனியாக ஒரு ஆல்பத்தை கூட உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் ஆல்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்போது இம்போர்ட் பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த அனைத்தும் மேக்கிற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்.
முதலில் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து உங்களுடைய விண்டோஸ் PCல் ஆப்பிள் டிவைஸ் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும்.
இப்போது ஒரு USB கேபிளை பயன்படுத்தி உங்களுடைய ஐபோனை PC உடன் இணைக்கவும்.
ஃபைல்களை வேறொரு சாதனத்திற்கு மாற்ற விரும்புகிறீர்களா என்பதற்கான அனுமதியை இப்போது நீங்கள் கொடுக்க வேண்டும்.
PCல் போட்டோஸ் அப்ளிகேஷனுக்கு சென்று நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்ய நினைக்கும் போட்டோக்களையும், வீடியோக்களையும் தேர்வு செய்யுங்கள்.
PCல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யவும்.
PCக்கு அனைத்து ஃபைல்களும் வெற்றிகரமாக டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு விட்டதா இல்லையா என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களுடைய போனை தொலைத்து விட்டாலோ அல்லது போனுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ அதில் உள்ள தகவல்களை ரெக்கவர் செய்வதற்கு பேக்கப் மிகவும் உதவும். எனவே எப்போதுமே உங்களுடைய டேட்டாவை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.