சினிமா

காட்டுத்தீயாய் பரவும் விடாமுயற்சி Update ! என்னவா இருக்கும்- தீவிர தேடலில் தல Fans !

Published

on

காட்டுத்தீயாய் பரவும் விடாமுயற்சி Update ! என்னவா இருக்கும்- தீவிர தேடலில் தல Fans !

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய காலம் முதல் ஏதாவது  ஒரு சிக்கலினால் ரிலீஸ் திகதி தள்ளிக்கொண்டே போனது.  இதனால் ரசிகர்களும் காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து சோசியல் மீடியாவில் எல்லா இடத்திலும் விடாமுயற்சி அப்டேட் கேட்க துடங்கி விட்டார்கள்.அதனால் படக்குழு இந்த முறை படத்தினை வெளியிட்ட திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள்.  இந்நிலையில் ஜனவரி 10ம் திகதி  பொங்கலுக்குத் இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் ஒரு பாடல் காட்சி படமாகாமல் உள்ள நிலையில், அந்தப் பாடல் காட்சியை டிசம்பர் 13ம் திகதி படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.  தற்போது அஜித்குமார் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கிறார். இந்த படத்தின் கடைசி பாடல் காட்சியை படம் ஆக்குவதற்கு முன்பே டப்பிங் உள்ளிட்ட பெருவாரியான இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் படக்குழு கூறியுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version