விளையாட்டு

குழந்தைக்கு ‘அஹான்’ எனப் பெயர் சூட்டிய ரோகித்-ரித்திகா தம்பதி.. பெயருக்கான அர்த்தம் தெரியுமா?

Published

on

குழந்தைக்கு ‘அஹான்’ எனப் பெயர் சூட்டிய ரோகித்-ரித்திகா தம்பதி.. பெயருக்கான அர்த்தம் தெரியுமா?

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா-ரித்திகா தம்பதிக்கு கடந்த நவம்பர் 15ஆம் தேதி அன்று ஆண் குழந்தை பிறந்தது. அவர்களுக்கு ஏற்கனவே சமைரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு அஹான் என்று பெயரிட்டு உள்ளனர். இது தொடர்பாக ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ஒரு குடும்ப பொம்மையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் தங்கள் மகனுக்கு அஹான் என்று பெயர் வைத்துள்ளதை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், அஹான் என்றால் என்ன? மற்றும் அந்த பெயருக்கான அர்த்தத்தை இங்கே பார்க்கலாம்.

அஹான் என்றால் ‘விடியல்’ அல்லது ‘ஆரம்பம்’ என்று பொருள்படும். ‘அஹான்’ என்ற பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும் கவர்ச்சியான, நம்பிக்கை மற்றும் நட்புடன் இருப்பார்கள் என்றும், தம் வசீகரத்தால் பிறரைக் கவரும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல், நட்பிற்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள் என்று பொருள்படுகிறது.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததையடுத்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருக்க முடிவு செய்திருந்தார். இதனால் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ரோகித் இல்லாத நிலையில், ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி, பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version