இலங்கை
கொழும்பு ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல்… வெளியான புதிய தகவல்!
கொழும்பு ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல்… வெளியான புதிய தகவல்!
கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (05-12-2024) மாலை கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
ஹோட்டலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஹோட்டல் ஒன்றில் தீ பரவியதாகவும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.